#Breaking இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்!
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை விமான சேவை ரயில் சேவை பேருந்து சேவை என அனைத்து பொது போக்குவரத்துகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து இயங்க அரசு உத்தரவிட்டது.
இது போன்றே சென்னை மெட்ரோ ரயிலும் சமீபத்தில் இயங்கியது. இருப்பினும் சென்னை மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இல்லாமல் இயக்க நேரத்தில் சற்று மாறுபாடு இருந்தது. இன்று முதல் அந்த இயக்க நேரத்தில் மீண்டும் மாற்றம் அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
அதாவது திங்கள் முதல் சனிக்கிழமை வரை உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பீக் ஹவர் எனப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் 10
நிமிடகளுக்கு ஒரு முறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும்.விடுமுறை நாட்களில் பிக் ஹவரின்றி மற்றநேரங்களில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும்,பயணிகள் தங்களது பயண நேரத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.