சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கின்ற வாக்குகள் அனைத்தும் விறைவாக முடிக்கப்படும் விதமாக, அவற்றை கண்காணித்து அதுகுறித்து தானே முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது.
அவதூறு வழக்குகள், மற்றும் குற்றச்சாட்டு வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அந்த வழக்கில் சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் இருக்கின்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்து இருக்கிறார்.
இதனையடுத்து சிறப்பு நீதிமன்றங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, எதிராக இருக்கும் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், எனவும் மற்றவர்கள் இவர்கள் மீது போட்ட வழக்குகளை விசாரிக்க தேவை இல்லை எனவும், நீதிபதி தெரிவித்து வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.