எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் களம் காண இருக்கிறார். அவருக்கு கூட்டணி அதிகாரம் போன்றவற்றை வழங்கி அவருடைய கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகின்றது என்று இதுவரையும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நடிகர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்சமயம் மீண்டும் ஒரு விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
அந்தவகையில், மெரினா கடற்கரை தற்சமயம் தமிழக அரசியல் கட்சிகள் உடைய ஆயுதமாக மாறி இருக்கிறது. அது தொடர்பாக கமல்ஹாசன் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் அதிலும்கூட அதிமுகவை விமர்சனம் செய்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
நாங்கள் நல்லாட்சி அமைப்போம் என்று கூறி கடற்கரையில் இருக்கின்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் சத்தியம் செய்கிறார்கள். அது என்ன நேர்மையான இடமா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதிமுக, பாஜக கூட்டணியில் இல்லையென்றால் அவர்களுடன் திமுக கூட்டணி வைக்க தயங்காது என்று தெரிவித்திருக்கிறார். முன்பொரு காலத்தில் கருணாநிதி எம்ஜிஆர் தொடர்பு இருந்தது தற்சமயம் அவ்வாறு இருக்கிறதா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.