இனி வங்கிகளுக்கு நாம் பணம் தர தேவை இல்லை! இனி வங்கிகளே நமக்கு பணம் தரும்!
அதிகப்படியான மக்கள் புலக்கத்தில் இருப்பது தான் ATM.இதை மக்கள் பணம் எடுக்கவும் மற்றும் போடவும் உபயோகித்து வருகின்றனர்.தினமும் பல கோடி பேர் உபயோகிக்கும் இந்த டிஜிட்டல் முறையில் ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு என்று எதுவும் கிடையாது.அந்த வகையில் மக்கள் பணம் எடுக்கும் போது அனைவரும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான் பணம் எடுக்கும் போது பணம் பரிவர்த்தனை ராத்தாகிவிடுவது.
மக்கள் பணம் எடுப்பதற்கு ATM கார்டை ATM யில் போட்டவுடன் பணம் எடுத்ததற்கான செய்தி போனிற்கு வந்து விடும்.அதன் பின் ATM லிருந்து வெளியே பணம் வராது.பணம் உள்ளுக்குள்ளே மாட்டிக்கொள்ளும்.
இவ்வாறு மக்கள் வங்கிக்கு சென்று முறையிடும் போது மக்கள் பணத்தை வங்கிகளிடம் இருந்து பெறுவதற்கு வெகு மாதங்கள் ஆகிவிடுகிறது.இக்காரணத்தினால் ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.தோல்வியடைந்த பண பரிவர்த்தனைகளுக்கு ஒரு வாரத்திற்குள் பணம் அவரது அக்கவுண்டிற்கு டெபாசிட் செய்ய வேண்டும்.
தோல்வியடைந்த பரிவர்த்தனை நடைபெற்ற அடுத்த 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரம் மற்றும் ஏடிஎம் ரசிது,அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் ஆகிய விவரங்களை எடுத்து வர வேண்டும்.இதை அவரது வங்கிகளில் கொடுத்து முறையிட வேண்டும்.
வாடிக்கையாளர்கள் முறையிட்ட நாள் முதல் அவரது வங்கி கணக்கில் பணம் வந்து சேரும் நாள் வரை வாடிக்கையாளரின் கணக்கில் வங்கி சார்பாக தினசரி ரூபாய் 100 போடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.