பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்து பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார் அந்த வகையில் இந்திய ராணுவத்திற்காக தயார் செய்யப்பட்ட நவீன அர்ஜுன் ரக பீரங்கி ராணுவத்திற்கு அர்ப்பணித்தார். அதோடு சென்னையில் விரிவு செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார். சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது புதிய சாலையை தொடங்கி வைத்த பிரதமர், விழுப்புரம் கடலூர்,மயிலாடுதுறை தஞ்சாவூர் மயிலாடுதுறை திருவாரூர் போன்ற பகுதிகளுக்கு மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் திறந்து வைத்து இருக்கிறார் சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்திற்க்கும் அவர் அடிக்கல் நாட்டி இருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தமிழக வருகைக்கு எதிராக சமூகவலைதளத்தில் கோபேக் மோடி என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. மோடி எதிர்ப்பாளர்களும், பாஜக எதிர்ப்பாளர்களும் ,மற்றும் எதிர்க்கட்சிகளும், மோடி அவர்கள் எப்பொழுது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் இதுபோன்று #trending செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், நடிகை ஓவியா கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக, நடிகை ஓவியாவை பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இந்தநிலையில் கோபேக் மோடி என்ற ஹேஸ்டேக் பதிவு செய்த நடிகை ஓவியா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அந்த கட்சியின் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.