பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
120

மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது, 45 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மறுபடியும் டிஆர்பி தேர்வு எழுத வாய்ப்பு கொடுப்பது தொடர்பாக, ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக பட்ஜெட்டில் இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என்று தகவல் தெரிவித்திருக்கிறார்.

மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடுவது தொடர்பாக தற்சமயம் எந்தவித கருத்தையும் கூற இயலாது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் தேதியில் முதலமைச்சரின் ஒப்புதலுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர். உருது மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் கிடையாது. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

Previous articleதொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!
Next articleஉடனே ராஜினாமா செய்யுங்கள்! அதிமுக கொந்தளிப்பு!