முக்கிய கோரிக்கை வைத்த மருத்துவர் அய்யா! நிறைவேற்றுமா ஆளும் தரப்பு!

0
114

அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வது உறுதியாகிவிட்ட நிலையில் தொகுதி பங்கீடு மட்டுமே செய்யப்படாமல் இருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் யாருக்கு எத்தனை தொகுதி என்பது முடிவு செய்யப்படும்போதுதான் மறுபடியும் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்று தெரியவரும்.

அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ச்சியான வலியுறுத்தல் இருந்து வருகின்றது. அதற்கான பேச்சுவார்த்தையும் கூட ஒரு சுமுகமான முடிவை அடைய இருக்கின்ற நிலையில், தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஒரு புதிய கோரிக்கையை வைத்திருக்கின்றார் மருத்துவர் அய்யா அவர்கள்.

ஆம் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு என்பது தான் அந்த கோரிக்கை பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே இந்த மதுவிலக்குக் கொள்கையை தீவிரமாக ஆதரித்து வருகின்றது. பல சமயங்களில் இந்த மதுவிலக்கு சம்பந்தமாக ஆளுங்கட்சிக்கு அறிவுரையும் கூறியிருக்கிறது.

இந்த மதுவால் ஏழை எளிய மக்கள், மற்றும் தாய்மார்கள், பெண்கள், என்று அனைவரும் துன்பப்படும் ஒரு நிலை இருந்து வருகிறது .ஆகவே தான் இந்த மதுவை முழுவதுமாக தமிழகத்தை விட்டு ஒழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த கொள்கையை தான் இப்பொழுது ஆளும் கட்சியிடம் கோரிக்கையாக வைத்திருக்கின்றது. ஆகவே தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு நிச்சயமாக இந்த கோரிக்கையை ஆளும் தரப்பு ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleபுதுச்சேரி மாநிலம் ராகுல் காந்தியின் திடீர் வருகை! காரணம் என்ன தெரியுமா?
Next articleதலையை வெட்டிய ரவுடி! ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!