விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்!

0
123
The people of the village are afraid of poisonous people!
The people of the village are afraid of poisonous people!

விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்!

சேலம் அருகே ஒமலூர் பகுதியிலுள்ள சேனக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தான் க்ர்ருஷ்ணர்.இவரை விஷ மனிதர் என்றும் ஊர் பொது மக்கள்  கூருகின்றனர்.இப்படி கூறுவதற்கு காரணம் இவர் விஷ  பாம்புகளையே அசால்ட்டாக  பிடிப்பது தான்.இவரது சிறு வயதில் ஒரு பாம்பிடம் கடி வாங்கி அதற்கு இவரே மூலிகை எடுத்து சாப்பிட்டுள்ளார்.அதன் பின் பல்வேறு பாம்புகளை பிடித்து. அதனிடம் கடி வாங்கியும் உள்ளார்.அப்போது அவருடன் கூட இருந்த நண்பர்கள் கூட இவருடன் சேராமல் இவரை தனித்து விட்டனர்.தனித்த காரணத்தினாலோ இவர் தானாகவே பாம்புகளை பிடித்து அதனிடம் கடி வாங்கிகொல்வதை வழக்கமாக வைத்துக்கொண்டார்.

அதையடுத்து இவரது டீனேஜ் கால கட்டத்தில் இவர் ஊரில் ஒருவருக்கு பாம்பு கடித்துவிட்டது.டாக்டர்கள் இவர் பிழைக்க மாட்டார் என கூறிய நிலையில் கிருஷ்ணர் தனது மூலிகையை கொடுத்து பிழைக்க வைத்து மாஸ் காட்டி உள்ளார்.அந்நாளிலிருந்து இவர் பாம்புகளின் அரசன் போல் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டார்.

omalur news in tamil
omalur news in tamil

அதையடுத்து இவர் பல சாதி பாம்புகளிடமிருந்து கடி வாங்கி விஷத்தை முறிக்கும் மூலிகை மருந்தையும் கண்டுபிடித்து வருகிறார்.இவருக்கு பெண் கொடுக்க யாரும் முற்படவில்லை.இவரின் மேல் ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட மனைவி தான் ராதா.கிருஷ்ணன் என்னும் பெயருக்கு பொருத்தமான ராதை எனவும் கூறலாம்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.இவரது மகனும் இவரை போலவே பாம்பை பிடித்து அதனிடம் கடியையும் வாங்கி கொள்கிறார்.பாம்பிடம் கடியை வாங்கிவிட்டு அல்வா சாப்பிடுவதை போலவே அவரது மகன் மாத்திரையும் முழுங்கி கொள்கிறார்.

கேட்பவருக்கே மிகவும் அச்சுறுத்தும் வகையில் ஒரு செய்தியையும் சொன்னார்.அவர் சாப்பிட்டு விட்டு கொடுக்கும் பொருளை நாம் சாப்பிட்டால் அந்த நொடியே நாம் இறந்துவிடுவோம் என கூறினார்.அவரை பல வித பாம்புகள் கடித்ததால் அதன் விஷங்கள் அனைத்தும் இவரது உடலில் உள்ளதால் இவர் சாப்பிட்டு கொடுக்கு பொருளிலிலும் விஷமுள்ளதாக கூறுகின்றனர்.இதனால் அவ்வூர் மக்கள் அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு கூட கூப்பிடுவதில்லை.அதுமட்டுமின்றி இவர் தனது அனைத்து பற்களையும் மற்றவர் நலன் கருதி பிடுங்கி விட்டதாகவும்  கூறினார்.இவரிடம் பாம்புகடியால் வருவபவர்கள் உயிர் பிழைக்காமல் சென்றதே இல்லை

Previous articleபுதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்! நாளைய தினம் பொறுப்பேற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்!
Next articleபாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக!