செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் தரையிறங்கியது – நாசா

0
145

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சமீபத்தில் செவ்வாய் கிரகத்திற்கு பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. தற்போது அந்த விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் வெளிப்பகுதியில் தரையிறங்கி உள்ளது.

அதாவது இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து உள்ளதா என்றும், அதற்கான சுவடுகள் ஏதும் அங்கு இருக்கிறதா என்றும், எதிர்காலத்தில் உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா என்றவை போன்ற பல ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது நாசா.

இந்த பெர்சிவரன்ஸ் விண்கலம், ஏழு மாதங்களுக்கு முன்பு நாசாவால் ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சுமார் 300 மில்லியன் மைல்கள் தூரத்தை கடந்து இன்று செவ்வாய்க் கிரகத்தின் மேற்பகுதியில் தரையிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற, அதாவது பெர்சிவரன்ஸை சுமக்கும் ஆய்வூர்தியான வாகனம் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. இந்த வாகனமானது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாகும். இந்த பெர்சிவரன்ஸ், பாராசூட்டின் வழியே ரோவரில் இருந்து பிரிக்கப்பட்டு, அதற்குப்பின் ஜெசீரோ கிரேட்டர் என்கின்ற பள்ளத்தில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Previous articleஜப்பான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பதட்டத்தில் மக்கள்!
Next articleஅமெரிக்கா – கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடனின் புதிய அறிவிப்பு!