கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

0
180

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற திமுகவின் பிரச்சார கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபெற்ற அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கனிமொழிக்கு ஆரத்தி எடுக்க கூட யாரும் அனுமதிக்கவில்லை என்று கனிமொழியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவமானது அந்த சமுதாய மக்களிடம் திமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை மிக வேகமாக முன்னெடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக திமுக கட்சியானது பல்வேறு பெயர்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அதில் நேற்று தர்மபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பெயரில் கனிமொழி தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.திமுக எம்பி கனிமொழி அவர்கள் வரும் நேரத்தில் அனைவரும் அவர்களுக்கு மாலை அணிவித்து ஆர்த்தி எடுத்தார்கள். ஆனால் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மட்டும் ஆர்த்தி எடுக்க கூட திமுக நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை.இது குறித்து மிகுந்த வருத்தத்துடன் மேடையேறி கனிமொழியிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதற்கு கனிமொழி அவர்கள் அந்த பெண்னை கட்டியணைத்து திமுக நிர்வாகிகள் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என்று பேசும் திமுகவில் அதன் நிர்வாகிகளே இவ்வாறு செய்திருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது இவ்வாறாக இருக்க சிலர் இந்த செயல் அனைத்தும் அவர்களே நடத்திய நாடகம் என்கிறார்கள். அதாவது தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகளை கவர தான் இவ்வாறாக திமுக நாடகம் நடத்துகிறது என்று சிலர் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

Previous articleஎகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணின் செயலை கண்ட மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்!
Next articleபெண்களே! உடலில் உள்ள தேவையில்லாத முடிகளால் கூச்சமா? இதோ உங்களுக்கான தீர்வு