மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு!
சீனாவில் இருந்து விருந்தாளியாக வந்த கொரோனா ஒரு வருடம் இங்கேயே தங்கி பல உயிர்களை காவு வாங்கியது.இதனையடுத்து இயல்பு நிலைக்கு இப்போது திரும்பி கொண்டிருக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சில காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதை கட்டு படுத்தும் விதமாக இரவு நேரம் பொது முடக்கத்தை அறிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து அமராவதி மற்றும் யவத்மால் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கொரோனா தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்புகள் உள்ளது.ஆகையால் அம்மாநிலத்தில் இரவு நேர பொதுமுடக்கம் உத்தரவிடப்பட்டுள்ளது.மக்கள் சுகாதாரமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என அம்மாவட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளன.