தமிழ்நாட்டில் எதிர்வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வரவிருக்கின்றது அதன் காரணமாக அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். இது போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று மாலை சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுகவின் அமைச்சர்கள் மீது திமுகவின் தலைவர் ஸ்டாலின் ஊழல் புகார்களை அடுக்கடுக்காக தெரிவித்து வருகின்றார். டிசம்பர் மாதம் 22ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை மீது ஆளுநரிடம் 97 பக்க புகார்களை எதிர்கட்சியான திமுக கொடுத்தது. தமிழக அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருந்து வருகிறது என்றும் அதோடு அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் திமுக ஒப்படைத்தது.
இந்த நிலையில், சென்னை ராஜ்பவனில் இன்றைய தினம் மாலை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிமுக அரசின் மீதான இரண்டாவது ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னரே சென்ற 2018 ஆம் ஆண்டு ஊழல் செய்து இருக்கின்ற அமைச்சர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சார்பாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.