ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பொய் கூறுகிறார்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக உரையாற்றிய கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் 70 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக பொய்யான ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள் எனவும், அதனை நம்பி தேர்தலில் நின்ற எனக்கு உறுப்பினர்களே வாக்கு செலுத்தவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து நாடாளுமன்றத் தொகுதியிலும் 30 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. இதில் எவ்வாறு 70 லட்சம் உறுப்பினர்கள் இருந்திருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பொய்யான தொகையை செலுத்தி பழைய அறிக்கையை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் எனவும், நம்முடைய நிர்வாகிகள் அங்கே அந்த அறிக்கை இருந்த பேப்பரை வைத்துக் கொண்டு சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்து இருக்கிறார். அதோடு முதலில் காங்கிரஸ் கட்சி பொய் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சாடி இருக்கின்றார்.