சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சுமார் நான்கு வருட காலமாக தண்டனை பெற்று அனுபவித்து வந்த சசிகலா விடுதலை ஆகி சென்ற எட்டாம் தேதி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த சசிகலா டிநகரில் இருக்கின்ற அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றார். அவர் பெங்களூருவில் இருந்த சமயத்திலேயே கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்து குணமடைந்த காரணத்தால், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்சமயம் முழுமையாக குணமடைந்து இருக்கின்ற காரணத்தால் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும்கூட மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர்ச்சியாக அவர் ஓய்வெடுத்து வருகிறார். சென்னையில் அவர் கட்சி நிர்வாகிகளை எந்த சமயத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சசிகலா அவரது வீட்டில் இருந்தபடியே ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்த இருக்கின்றார். அதன் பின்னர் விருந்தினர்களை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் கோயிலுக்கு போகவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்பொழுது வெளியில் போகலாம் என்று தெரிவிக்கிறார்களோ , அந்த சமயத்தில் சசிகலா கோவிலுக்கு போவார் என்று தெரிகிறது. கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. பத்திரிகையாளர்களையும் சந்திப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார்.