சைடிஷ் இல்லாமல் சாப்பாடு நிறைவாக இல்லையா? இதை செய்து பாருங்கள்

0
136
Chicken Bits Recipe
Chicken Bits Recipe

சைடிஷ் இல்லாமல் சாப்பாடு நிறைவாக இல்லையா? இதை செய்து பாருங்கள்

சைவ உணவுகள் சாப்பிட வெறுப்பாக உள்ளதா? வீட்டில் இருக்கும் போது சுவையாக சாப்பிட தோன்றும்.சிலர் சைவ பிரியர்களாக இருப்பார்கள். பலர் அசைவ பிரியர்களாக இருப்பார்கள். ஒரு சிலர்க்கு மட்டுமே சைவத்துடன் அசைவத்தையும் சேர்த்து சாப்பிட பிடிக்கும். இதை முயற்சி செய்து பாருங்கள்.

சிக்கன் பிட்ஸ்

Chicken Bits Recipe
Chicken Bits Recipe

தேவையான பொருட்கள்:

அரைத்த கோழிக்கறி- 500 கிராம்.

கடலை மாவு- 1 மேசைக்கரண்டி.

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவைக்கேற்ப.

உப்பு- தேவைக்கேற்ப.

மைதா மாவு- 1 மேசைக்கரண்டி.

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி.

செய்முறை: அரைத்த கோழிக்கறி,இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கறி கலவையை பச்சை மிளகாய் வடிவத்தில் உருட்டவும்.மொத்த கலவையையும், இப்படியே செய்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் மைதா மாவு மற்றும்கடலை மாவைச் சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள கறி பிட்ஸ்களை கரைசலில் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Previous articleசத்து நிறைந்த பால் காய்கறி சூப் செய்வது எப்படி?
Next articleஆணோ பெண்ணோ! நீங்களும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்