மிருதுவான பளபளப்பான மற்றும் அழகான சருமம் வேண்டுமா? இதோ டிப்ஸ்

0
209
potato-face-pack
potato-face-pack

மிருதுவான பளபளப்பான மற்றும் அழகான சருமம் வேண்டுமா? இதோ டிப்ஸ்

இதை இதற்கும் பயன்படுத்தலாமா? உணவில் சுவையை மட்டும் அல்ல முகத்திற்கு அழகையும் தரும் ஒரு காய்கறி வகை.நாம் அன்றாடம் பயன்படுத்துவதும், எல்லோருக்கும் எளிதில் கிடைப்பது. அதுமட்டுமன்றி குறைந்த விலையில் கிடைக்கும் உருளைக்கிழங்கில் கலோரிகள், தாது உப்புக்கள், வைட்டமின் C, நார்ச் சத்துக்கள் மட்டுமின்றி பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

உருளைக்கிழங்கு பேஸ் பேக் 

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு -1.

முல்தானி மட்டி – 2 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை தோலை உரித்துத் துண்டு துண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்.வெட்டி வைத்த உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றைப் பிழிந்து எடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கு சாற்றுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டியைச் சேர்த்துக் கொள்ளவும்.

இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.பின்னர் இந்த கலவையை முகத்தில் பூசி ஊற வைக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை மிதமான தண்ணீரில் கழுவியப் பின் இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தைத் துடைக்கவும்.இதை தொடர்ந்து செய்து வாருங்கள் உங்கள் முகமும் மிருதுவான பளபளப்பான மற்றும் அழகாக மாறும்.

Previous articleதொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கில்லிவிடுவது போல் அமைச்சர் வேலுமணி செய்த காரியம்!
Next articleஅசைவ உணவு சமைக்க தெரியலையா? இனி கவலை வேண்டாம்