பெட்ரோல் டீசல் விலை மாநில அரசு அதிரடி அறிவிப்பு! வாய்பிளந்த அண்டை மாநிலங்கள்!

0
117

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை மட்டும் கிடையாது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் ஒரு பேராபத்தாக கொரோனா இருந்துவருகிறது. ஆனால் தற்சமயம் இந்தியாவை கொரோனாவை கடந்து அச்சுறுத்தும் ஒரு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை கடந்திருக்கிறது.

இதன்காரணமாக, எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். சென்ற 12 தினங்களில் மட்டுமே பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 3.63 மற்றும் டீசல் விலை 3.84 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில், மேற்கு வங்காள மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் வரியிலிருந்து ஒரு ரூபாயை குறைத்திருக்கிறது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

டீசல் மற்றும் பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில், அந்த மாநில அரசின் இந்த நடவடிக்கை நாட்டில் இருக்கக்கூடிய அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

ஆகவே அந்த மாநிலத்தை பின்பற்றி மற்ற மாநில அரசுகளின் வரியில் இருந்தும் உழைப்பு அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு தற்காலிகமான தீர்வுதான் ஆனாலும் மத்திய அரசு பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால் மட்டுமே விலை உயர்வை கட்டுக்குள் வைக்க முடியும் என்பது சாதாரண மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது இதற்கு செவிசாய்க்குமா? தமிழக அரசு.

Previous articleஆரம்பமானது கிளைமேக்ஸ்! அதிகாரத்தை கையில் எடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!
Next articleதிமுக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை! கூட்டணியில் பிளவை ஏற்படுத்திய முக்கிய கட்சி!