பறப்பதையே கனவாக கொண்ட விமானிகள் இருவருக்கு பரிதாப நிலை நேர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ராணுவ ஜெட்டில் விமானிகளுக்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. பயிற்சி அளிக்கப்படும் விமானம் டி-38, இது 14வது படையை சேர்ந்ததாகும்.
இதில் முன்தினம் மாலையில் எப்பொழுதும் போலவே பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. இந்த விமானம் மிசிசிப்பியிலுள்ள கொலம்பஸ் என்கின்ற விமானதளத்திலிருந்து புறப்மட்டு சென்று புளோரிடாவில் இருக்கும் டல்லாஹஸ்ஸிக்கு செல்லும். இதுவே அவர்களின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த பயிற்சியின் போதும் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென்று இயந்திர பழுதால் ஓரிடத்தில் “தீ விபத்திற்கு” உள்ளாகியது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானிகள் இருவர் எதிர்பாராத இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்தச் செய்தியை விமானத்துறை மேலோட்டமாக ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளது, முழுமையான தகவல்களை அவர்கள் பகிர விரும்பவில்லை. இச்சம்பவத்தை அறிந்த விமானிகளின் குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். விமானப்படை துறை அதிகாரிகள் விமானிகளின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.