கோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!

0
159

உலகமே ஒரே காய்ச்சலால் சூழப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காய்ச்சல் மக்களை கொடூரமாக கொடுமைப் படுத்தி வரும் இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியது.

தற்போது தெற்கு ரஷ்யாவில் பறவைக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. H5N8 என்று அடுத்ததாக புதுவித வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரஷ்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்பவர்களின் உடல் அணுக்களை சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்நாட்டில் அரிதாக இப்பொழுது தான் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதற்கு முன்பாக பரவியது இல்லை, இது பறவைகளிடம் இருந்து அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பரவியுள்ளது என்று சுகாதாரத்துறை ஆய்வாளர் அண்ண போபோவா (Anna popova)அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த பறவை காய்ச்சல் பரவல் அங்குள்ள 7 ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு பெரிய அளவில் உடல் ரீதியாக எந்த பெரிய பாதிப்பும் நிகழவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இதை கூறுகையில் இந்த H5N8 வைரஸின் ஆய்வுகள் குறித்து உலக சுகாதார துறைக்கு ஆய்வுகள் அனைத்தும் கோப்பாக (files) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.