தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

0
214
தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு
தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவ்வாறே அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரியிலும், வட மாநிலங்களான அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது.
இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள், தேர்தல் தேதிகளை இறுதி செய்வது உள்ளிட்டவைகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் இன்னும் கொரோனா பரவல் விலகாத நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கபட உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது, அங்கு பதற்றமான வாக்குச்சாவடிகள், பயன்படுத்தவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் இந்த 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இறுதி செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Previous articleவெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம்
Next articleவசதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட ஒரு அறிய வாய்ப்பு! மத்திய அரசின் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here