நாளை முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் எதுவும் இயங்காது-போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச் சுமையை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்ததால், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்குகின்றனர்.
தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் வேலைநிறுத்தம் செய்தால் தான் தமிழக அரசு தங்களது கோரிக்கை நிறைவேற்றும் என்பதை அறிந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது போக்குவரத்து தொழிலாளர் சங்கம்.
தொமுச, ஏஐடியுசி(AITUC), சிஐடியு(CITU) உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு பின்புலமாக திமுக தான் இருக்கிறது என்று அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வலுப்பெற்றால் தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இதை இந்த ஆளும் எடப்பாடி அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.