வித்தியாசமான தோற்றத்தில் வெள்ளை சுறா – இந்தோனேஷியா!

மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் பல வித்தியாசமான கடல்வாழ் உயிரினங்களை பார்த்திருப்பார்கள். அவற்றின் செயல்களையும் கவனித்திருப்பார்கள். உதாரணமாக டால்ஃபின் என்றழைக்கப்படும் கடல் வாழ் உயிரினம், கடல் அலைகளின் மீது தாவி தாவி செல்வது காண்பவர்களை ரசிக்க வைக்கும்.

இதுபோல் பல வித்தியாசமான சம்பவங்கள் கடலில் நிகழ்ந்துள்ளது. தற்போது இந்தோனேஷியாவில் வெள்ளைநிற சுறா ஒன்று பிடிபட்டுள்ளது. கிழக்கு திசையின் நியூசா டென்காரா என்றழைக்கப்படுகின்ற கடல்பகுதியில் மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் வலையில் வெள்ளைநிற சுறா பிடிபட்டுள்ளது. அந்த சுறா மனித முகம் கொண்ட தோற்றத்துடன் காணப்பட்டுள்ளது. இந்த சுறாவை கண்ட மீனவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

இந்த வெள்ளை நிற சுறாவை கரைக்கு கொண்டு வந்தனர் அந்த மீனவர்கள். கரைக்கு திரும்பிய சில நொடிகளில் இந்த வெள்ளைநிற சுறா இறந்து விட்டது. இந்த மனித முகம் கொண்ட வெள்ளை நிற சுறாவை கண்ட ஆராய்ச்சியாளர்கள் மரபணு குறையின் காரணமாக இந்த சுறா இவ்வாறு பிறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment