ப,சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?
மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவரும்,திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் தற்போதைய பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்கு பிறகு இந்த மருத்துவ கல்லூரி தொடர்பாக எந்த ஒரு சிக்கலோ, பிரச்சனையோ இல்லாமல் வந்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தருக்கு தற்போது மாணவ மாணவியர் தற்கொலை என்ற ரூபத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாகவே சென்னையை அடுத்துள்ள மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள பாரிவேந்தரின் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் உள்ள ஹாஸ்டல்கள் மற்றும் கல்லூரி கட்டிடங்களில் இருந்து மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
ஆரம்பத்தில் இது மாணவர்களின் சொந்த பிரச்சனை என்று நினைத்தவர்களுக்கு தொடர்ந்து நடந்த தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒரே கல்லூரி நிர்வாகத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து எப்படி மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக இறந்த மாணவர்களின் உறவினர்களும்,பெற்றோர்களும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களின் இது போன்ற தற்கொலை மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக தமிழக சிபிசிஐடி சார்பாக எஸ்.பி. மல்லிகா தலைமையில் எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிகள் மற்றும் அதன் விடுதிகளில்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறை தலைவர் அதாவது DGP அலுவலகத்திலிருந்து பத்திரிக்கை செய்தியும் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனுப்பிரியா 21 வயதேயான இவர் கடந்த மே மாதம் 26-ம் தேதி கல்லூரியின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோன்று 27-ம் தேதி அன்று ஜார்கண்டை சேர்ந்த மாணவன் அணித் சவுத்ரி என்பவரும் கல்லூரியின் பின்புறம் இறந்து கிடந்தார். 15-ம் தேதி ஜூலை மாதம் கன்னியாகுமரியைச் சேர்ந்த தர்ஷன் என்ற மாணவரும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தான் தமிழக சிபிசிஐடி காவல் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த விசாரணைக்கான உத்தரவை தமிழக டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். திமுக கூட்டணி கட்சி தலைவரும்,எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் தலைவராகவும் உள்ள பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை சம்பந்தமான பிரச்சனையிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இந்த நிலையில் இந்த கல்லுரி மாணவர்களின் தொடர் தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி சோதனை அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில்,அடுத்து திமுகவின் கூட்டணி கட்சியின் எம்.பியாக உள்ள பாரிவேந்தர் மாணவர்களின் தற்கொலை வழக்கில் சிக்குவாரோ? என்று பரபரப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் தமிழக காவல் துறை அதிகாரிகள்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.