தொகுதி பங்கீட்டில் திமுக காட்டிய கறார்! கூட்டணியை விட்டு விலகிய முக்கிய கட்சி அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
92

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக சார்பாக டி ஆர் பாலு அவர்களின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு காங்கிரஸ் மற்றும் மதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது.

ஆனாலும் திமுகவின் தலைமையால் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை தர முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி 5 சதவீத தொகுதிகளில் நின்றால் மட்டுமே தனிச் சின்னம் கிடைக்கும் இல்லையென்றால் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்ற விதிமுறை இருந்து வருகிறது.

ஆனால் திமுகவோ தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகள் விரும்பிய தொகுதிகளை கொடுப்பதற்கு தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய அநேக கட்சிகள் எல்லாம் பத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளில் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுகவின் தலைமை ஒற்றை இயக்கத்திலேயே தொகுதிப் பங்கீட்டை முடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது.

திமுகவின் இந்த நினைப்பை புரிந்துகொண்ட கூட்டணி கட்சிகள் அதில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதேபோல மனிதநேய மக்கள் கட்சி இந்திய முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தாலும் அந்த கட்சிகள் அனைத்தும் திமுக மீது கடும் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல ஆதிகாலம் தொட்டே திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் தொகுதி பங்கீடு என்பது சாதகமாக இல்லை என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது.

இப்படி திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அந்த கட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தியில் இருப்பதால் அந்த கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதாக சொல்கிறார்கள்.

இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுப்பாக இருந்துவரும் பிரசாந்த் கிஷோரின் அறிவுரை தான் என்று சொல்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் சார்பாக திமுக தலைமையிடம் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் எதிர்வரும் தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மிகாமல் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான் திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் இவ்வாறு கறார் காட்டி வருவதாக சொல்கிறார்கள்.

ஏற்கனவே பிரசாந்த் கிஷோரின் பேச்சைக் கேட்டு திமுக தலைமை செயல்படுவதாகக் கூறி திமுகவின் மூத்த தலைவர்கள் எல்லோரும் அந்த கட்சியின் தலைமை மீது கடும் வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பொழுது தொகுதி பங்கீடு விவகாரத்திலும் அவருடைய பேச்சைக் கேட்டு இப்படி திமுக தலைமை கறார் காட்டி வருவது அந்த கூட்டணி கட்சியினருக்கும் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது இப்படியே தொடருமானால் தேர்தல் வரை என் கூட திமுகவின் கூட்டணி நிலைத்திருக்காது என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் தர படுவதாகவும் அவர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரையும் மதிப்பதில்லை என்றும் புகார் எழுந்து வந்திருக்கிறது.

இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்ட சமயத்தில் கூட பிரசாந்த் கிஷோரின் பேச்சைக்கேட்டு திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு செய்வதில் காட்டி வருவது அந்த கட்சியினர் இடையே கூட மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனாலும் இதையெல்லாம் மீறி பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் தமிழகத்தில் நிச்சயமாக பலிக்குமா என்பதை யாராலும் கணிக்க இயலாது. ஏனென்றால் வட இந்தியாவில் வேண்டுமானால் அவருடைய ஜாலம் வேலை செய்திருக்கலாம் தமிழகத்தில் அவருடைய ஜாலம் பலிப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.

திமுக தொடங்கப்பட்ட இந்த 50 ஆண்டு காலங்களில் இதுவரையில் திமுக இப்படி செயல்பட்டதில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் திமுகவின் வரலாற்றிலேயே இதுவரையில் இல்லாத வகையில் வட நாட்டைச் சார்ந்த ஒருவரை அதுவும் பிராமணர் இனத்தைச் சார்ந்த ஒருவரின் தேர்தல் வியூகத்தை கொண்டு தேர்தலை சந்திக்க இருப்பது இதுவே முதல் முறை என்று சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பிரசாந்த் கிஷோர் அவர்கள் திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுக்க பொறுப்பேற்று இருப்பது பாஜகவின் சூழ்ச்சி தான் என்று கூட ஒரு சில செய்திகள் உலாவிய வண்ணம் இருக்கின்றன.

ஏனென்றால் பிராமணர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம்தான் திமுக, அந்த இயக்கத்தை வெற்றி பெற வைப்பதற்காக ஒரு பிராமணரை தேர்தல் வியூக வகுப்பாளர்கள் நியமனம் செய்து இருப்பது தான் திமுகவின் அபிமானிகளின் மனதில் தற்போது எழுந்திருக்கும் பயத்தின் காரணம் என்று சொல்கிறார்கள்.

Previous articleவதந்திகளை நம்பாதீங்க! பாஜக தலைமை அதிரடி!
Next articleபெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்!