இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிடுகின்ற ஒரு அறிவிப்பில், தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் அதேவேளையில், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறும் வகையிலும், வரும் மார்ச் மாதம் பதினோராம் தேதி அன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் எழுதி இருக்கின்ற கடிதம் ஒன்றில், நம்முடைய கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது தமிழக மக்களின் நலனுக்காக வெளியிடப்பட இருக்கிறது. எனவும் தமிழக மக்கள் இதுவரையில் இருந்த சிக்கல்களில் இருந்து வெளிவரக்கூடிய ஒரு தேர்தல் அறிக்கையாக நம்முடைய தேர்தல்அறிக்கை இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதேபோல இந்த தேர்தல் அறிக்கை 2006ஆம் வருடம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தெரிவித்ததை போல தற்சமயம் 2021 ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இந்த தேர்தல் அறிக்கை தேர்தல் நாயகனாக விளங்கும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 2011 ஆம் வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் சரி, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் சரி, அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையை தாமதமாக தான் வெளியிட்டது. அதற்கு முன்பாகவே திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற வியூகங்களை தேர்தலுக்காக கையாண்டு அவர் வாழ்ந்த காலத்தில் சாதுரியமாக வெற்றியை தன்வசப்படுத்தி இருக்கின்றார்.
அந்த விதத்தில், ஒரு தேர்தல் வந்தால் தேர்தல் அறிக்கையை தாமதமாக வெளியிடுவதும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. எதிர்க்கட்சிகள் எந்த மாதிரியான வியூகத்தை வகுக்கிறார்கள் . அவர்களின் தேர்தல் அறிக்கை எவ்வாறு இருக்கிறது என்பதை கணித்து விட்டு அதன் பிறகு அதற்கு ஏற்றார் போல எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை சமாளிக்கும் வகையிலான ஒரு தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வல்லவராகத் திகழ்ந்தார்.
அவரிடம் இருந்த அந்த சாதுரியம் தான் கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் திமுகவை ஆட்சி கட்டில் பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.
அவருடைய மறைவுக்குப் பின்னர் முதல்வர் பொறுப்பிற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் குடைச்சல்கள் அனைத்தையும் சாதூர்யமாக சமாளிக்கும் அதேவேளையில், தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொண்டு மக்கள் மத்தியில் இன்று வரையில் குறிப்பிடத்தக்க நற்பெயர் உடன் திகழ்ந்து வருகின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சாதனை செய்துவிட்டார் என்று கேட்பதை விடவும் அவர் முதலமைச்சராக இருந்த இந்த நான்கரை ஆண்டு காலங்களில், திமுக என்ற மிகப்பெரிய இயக்கத்தை சமாளித்து இன்று வரையில் தமிழக மக்களின் மனதில் ஒரு நற்பெயரை விதைத்திருக்கிறார். என்பதே ஒரு சாதனை தான் என்று சொல்கிறார்கள் அவருடைய அபிமானிகள்.
இருந்தாலும் தமிழகத்திலே தஞ்சை சுற்றியிருக்கிற பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போன்ற பல நல்ல திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பது யாராலும் மறுக்க முடியாது விஷயமாக இருந்து வருகிறது.அந்தவகையில், பார்த்தோமானால் ஜெயலலிதாவிடம் இருந்த அதே சாதுரியம் இப்பொழுது முதல்வராக இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். திமுக வரும் 11ஆம் தேதி தன்னுடைய தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இன்று வரையில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாக தெரியவில்லை. ஆகவே ஜெயலலிதா கடைபிடித்த அதே உத்தியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்வார் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு ஜெயலலிதா கடைபிடித்த ஒவ்வொரு உத்திகளையும் எடப்பாடி பழனிச்சாமி கடைப்பிடிப்பாரேயானால் இந்த முறையும் திமுக ஆட்சிக்கு வருவது கடினம் தான் என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.