பெட்ரோலின் விலையை குறைக்காமல் திடிரென்று மோடி செய்த அறிவிப்பு!
இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலில் அதிக படியான பொருட்கள் விலை உயர்வை கண்டுள்ளது.அந்தவகையில் பெட்ரோலின் விலை வானத்தை தொடும் அளவுக்கு ஏறியுள்ளது.இதை குறைக்கும் விதமாக லாரி ஓட்டுனர் சங்கம் ஆங்காங்கே வேலை நிறுத்தம் செய்து வருகின்றன.இதுமட்டுமின்றி பெட்ரோல் விலை உயர்வால் போக்குவரத்து செய்து கொண்டு செல்லும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.இதனால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஆன்லைனில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கூறியது,இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை இருப்பது மிகவும் அவசியம்.இளைஞர்களுக்கு கல்வி திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றில் நம்பிக்கை இருபதனால் மட்டும் தான் தன்னம்பிக்கை பிறக்கிறது.இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலில் சுகாதரதுறைக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.அந்தவகையில் அடுத்தபடியாக கல்வி,ஆராய்ச்சி மற்றும் திறன் என அனைத்திற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய தேசிய கொள்கைகளில் இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு செயல்படும் வாகனம் குறித்தும் சோதனை செய்யப்படுகிறது.இப்பொழுது நாம் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு பயன்படுத்த தயாராக உள்ளோம் எனக் கூறினார்.எதிர்காலத்தில் எரிபொருளாக கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது மிகவும் அவசியமானதாகும் எனவும் கூறினார்.ஆகையால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஹைட்ரஜன் மிஷின் ஒரு பெரிய தீர்மானத்தை கொண்டு வரும் எனக் கூறினார்.
எதிர்காலத்தை பற்றி பேசும் மோடி இக்காலத்தில் ஏறி இருக்கும் பெட்ரோலின் விலையை பற்றி சிறிதளவும் கூட பேசவில்லை.இதை குறைப்பதற்கு வழி கூறமால் பசுமை ஆற்றல் மற்றும் மாணவர்கள் என அனைத்தையும் கூறினார்.