ரிவென்ஜ் எடுத்த மத்திய அரசு!அதிர்ச்சியில் பிரபல நடிகை!
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.விவசாயிகள் 90 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து விவசாயிகள் கடும் குளிர் மட்டும் வெயில் பார்க்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.இதை அனைத்தையும் பொருட்படுத்தாத மத்திய அரசு தனது வேலைகளை மட்டும் தினந்தோறும் செய்து வருகிறது.விவசாயிகளும் தங்களில் நீதிக்காக போராடி வருகின்றனர்.போராடி வரும் இந்த விவசாயிகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பல படங்களில் கதாநாயகியாக வளம் வரும் டாப்சி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அதனையடுத்து இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரவித்துள்ளார்.இவர்கள் ஆதரவு தெரிவிப்பதனாலையோ என்னவோ இவர்கள் வீட்டில் இன்று ஐடி ரைடு நடத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா,விகாஸ் ஆகியோர் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதால் இவ்வாறு வருமான வரி சோதனை நடத்தப்படுகிறதா என திரைத் துறையிலிருக்கும் அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.