பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
ஓய்வு பெரும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது தான் பென்சன்.இந்த பென்சன் தொகையை வாங்குவதற்கு பெருமளவு அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.பென்சன் தொகையை பெறுவதற்கு மத்திய சிவில் சர்வீஸ் 1972 விதி 59 ன் படி பின்பற்றபடுகிறது.இந்த பென்சன் தொகையை பெறுவதற்கு முதலில் ஓய்வு பெரும் ஆறு மாதத்திற்கு முன்தாகவே ஓய்வுதியம் பெறுவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
மேலும் சமர்பிக்காமல் அதனுள் இறந்துவிடும் அரசு ஊழியர்களுக்கு அவரது குடும்பத்தினர் பென்சன் தொகையை வாங்குவது மிகவும் சிரமிதிற்குள்ளனதாக ஆகிவிடுகிறது.அவ்வாறு இறந்து போன ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் சிரமப்படாமல் எளிதான முறையில் அவர்களது பென்சென் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
அந்தவகையில் மத்திய அரசு பதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.அதில் ஓய்வு பெற்று இறந்துபோன அரசு ஊழியர்களின் பென்சன் பணத்தை பெறுவதற்கு அவரது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப உறுப்பினர்கள் form 14 மற்றும் form 3 என்ற உரிமைக் கோரல் ஆவணத்தை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதை சமர்ப்பித்த சில நாட்களில் ஓய்வு பெற்று இறந்த அரசு ஊழியர் பென்சன் பணம் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைக்கும்.