குளிர்பானத்தை குடிக்க முயலும் குட்டி பூனை – ரசிக்க வைக்கும் வீடியோ!

0
270

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்றாலே ஒரு வித தனி மகிழ்ச்சி தான். அதிலும் செல்லப்பிராணிகள் செய்யும் வினோத செயல்கள் காண்போரை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். செல்லப்பிராணிகளின் அன்பிற்கு ஈடு-இணையே இல்லை என்று கூறலாம்.

அந்த வகையில் குட்டி பூனை ஒன்று மேஜையில் உள்ள குளிர்பானத்தை குடிக்க முயற்சி செய்துள்ளது. அதிலுள்ள ஸ்ட்ராவை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு அது மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் அதன் முகபாவனை அனைத்தும் காண்போரை ஈர்த்து வருகிறது.

இந்த வீடியோ வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் கடைசி வரை அந்த குட்டி பூனை, ஸ்ட்ரா உடன் விளையாடி கொண்டு இருக்கிறதே தவிர அதனால் குடிக்க முடியவில்லை.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில் – மனிதர்கள், மனவருத்தத்தில் இருந்தாலும் அல்லது கோபத்தில் இருந்தாலும் செல்லப்பிராணிகளின் அருகில் சிறிது நேரம் செலவு செய்தால் மன அழுத்தம் குறையும் என்கிறார்கள்.

Previous articleபிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்!
Next articleவிசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here