இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு!
கொரோனா தொற்றானது மக்களிடயே பலவிதங்களில் பரவி மக்களின் உயிர்களை பறித்துவிடும் அளவிற்கு செல்கிறது.கொரோனா அதிக அளவில் பரவிய நிலையில் 144 தடை உத்தரவு பிரபிக்கப்பட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.கொரோனா தோற்று சிறிதளவு குறைந்த நிலையில் சில தளர்வுகள் கூடிய விதிமுறைகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து கொரொனோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் போடபட்டு வருகிறது.மக்கள் யாரும் இந்த தடுப்பூசியை போடுவதற்கு முன்வரவில்லை.அதற்கு காரணம் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்பதே ஆகும்.ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தாங்களே மக்களுக்கு முன்னுதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.மக்களும் போட்டுக்கொள்ளும் படி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்க இருக்கிறது.இதில் வாக்களிக்க வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இவற்றின் மூலம் தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பாதுகாப்பை கருதியும் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது என கூறினர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ என்ற பாதுகாப்பு உடையை அணிந்து வந்து தங்களின் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.