பொதுவாகவே பெண்களுக்கு திருமணம் ஆன பிறகு அவர்களின் வாழ்க்கை முறையில் பெருமளவிளான மாற்றம் ஏற்படுகிறது. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று அவர்களுடைய வாழ்க்கை ஒருவித கட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அவர்களின் கனவுகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது.
ஆனால் சிலர் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘அஞ்சா கல்லன்பாக்’ என்ற பெண்மணி ‘மிஸ் ஜெர்மனி’ என்ற அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இதற்காக அவர் பல சவால்களை தாண்டி வந்துள்ளார்.
அவருக்கு இப்போது 33 வயது ஆகிறது என்பதும், மேலும் அவர் இரண்டு செல்ல குழந்தைகளுக்கு தாய் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தனது வெற்றி குறித்து அவர் கூறுகையில், குடும்பத்தினர் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர் என்று குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இவர் இதற்கு முன்பாக “மிஸ் துரிங்கியா” பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் ஜெர்மனி பட்டம் பெற்றதை தான் மிகவும் பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். எனவே, பெண்கள் சாதிப்பதற்கு வயது மற்றும் திருமணம் ஒரு தடை இல்லை, ‘தன்னம்பிக்கை’ இருந்தால் போதும் என்று கூறியுள்ளார்.