ஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்

0
406

ஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்

ஆகஸ்டு 22 இரண்டாம் தேதியான நேற்று முன்தினம் சென்னை மக்கள் சென்னையின் பிறந்த நாளினை பெரு மகிழ்வோடு கொண்டாடினர். ஆம் நேற்றோடு சென்னைக்கு வயது 380 முடிந்து 381 ஆரம்பித்து விட்டது. பிறந்த நாள் தொட்டு இன்று வரை சென்னையானது அசுரவளர்ச்சி அடைந்து வருவது மட்டுமின்றி தன்னை மென்மேலும் வலுப்படுத்திக்கொண்டே வருகிறது.

என்ன தான் மிகப் பெரிய மாநகரமாக வளர்ந்திருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது சென்னையின் அன்றைய மண்ணின் மைந்தர்களான பச்சைத் தமிழர்கள் ‘தாமல் சகோதரர்கள்’ ஆவர். ‘சென்னப்பநாயகர் பட்டினம்’ என்பதே சென்னையின் முழுப்பெயர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சென்னப்பநாயகரின் மகன்களே காஞ்சிபுரம், தாமல் பகுதியைச் சேர்ந்த வேங்கடப்ப நாயகர் மற்றும் அய்யப்பநாயகர் ஆவர்.

ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி யானது இந்தியாவில் தங்களது வணிகத்தளத்தை அமைக்க கடலோரத்தில் இடம் தேடியபோது அவர்கள் தேர்ந்தெடுத்ததே பழவேற்காட்டிற்கு தெற்கே இருந்த மாதரசன்பட்டினம் என்னும் ஊரின் அருகில் இருந்த இடம் ஆகும். கிபி 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியான் ‘ப்ரான்சிஸ் டே ( FRANCIS DAY) ‘ என்பவர் பூந்தமல்லியைத் தலைநகராகக் கொண்டு மாதரசன்பட்டினத்தை ஆட்சி செய்த தாமல் சகோதரர்களிடம் அந்த இடத்தில் வணிக மையம் அமைக்க கோரிக்கை வைத்த பொழுது அதற்கு அவர்கள் ஒரு நிபந்தனையோடு சம்மதம் தெரிவித்தனர்.

புதிதாக அமையவிருக்கும் வணிக நகருக்குத் தங்கள் தந்தையாரின் பெயரை வைக்கவேண்டும் என்ற நிபந்தனை தான் அது. அதற்கு ‘ப்ரான்சிஸ் டே’ அவர்கள் சம்மதிக்கவே ஒப்பந்தமானது தங்கத்தகட்டில் பொறிக்கப்பட்டது. அதன்படி வணிக மையம் ‘சென்னப்பநாயகர் பட்டினம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த சென்னப்பநாயகர் என்பவர் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த பல்லவர்கள், காடவராயர்கள், சம்புவராயர்கள் வழிவந்தவர்கள் ஆகும். ஆகவே சென்னையானது முழுக்க முழுக்க தமிழர்களுக்குச் சொந்தமான மாநகரமாகும்.

இந்த தகவலானது சென்னை தினக் கொண்டாட்டத்தை தன்னிச்சையாக நடத்திய சென்னை மக்கள் அளித்த வரலாற்றுத் தரவுகள் மூலம் அறியப்பட்டது ஆகும். (பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை அமைப்பான ‘பசுமைத்தாயகம்’ சென்னை நாள் கொண்டாட்டத்தில் சென்னப்பநாயகர் க்கு அரசுவிழா எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்) இவர்கள் மேலும் கூறியதாவது,

சென்னப்பநாயகர் தெலுங்கர் என்பது போன்ற செய்திகள் இணையதளப் பக்கங்களில் காணக் கிடைப்பதாகவும் அவை உண்மையல்ல என்றும், சென்னப்பநாயகர் வேளிர் வழிவந்த பச்சைத்தமிழர் என்பதை வலராற்றுத் தரவுகளோடு நிறுவுவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறினர்.

இந்த பெருமைக்குரிய தமிழரை தெலுங்கராக இணையதளத்தில் அடையாளப்படுத்த முயற்சிக்கும் நபர்களை கண்டித்து அதை சரி செய்யுமாறு தமிழ் ஆர்வலர்களும்,பாட்டாளி மக்கள் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleதமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீட்டுக்காக? திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்
Next articleதமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்நிலை!