ஷங்கர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்! குக் வித் கோமாளி புகழுக்கு நடந்தது என்ன?

Photo of author

By Rupa

ஷங்கர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்! குக் வித் கோமாளி புகழுக்கு நடந்தது என்ன?

குக் வித் கோமாளி என்ற ஷோ மக்களின் மனதை பெரிதும் கவர்ந்து வந்துள்ளது.இதில் பல கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் காமெடிகளை மக்கள் ரசித்து வருகின்றனர்.இதில் இருக்கும் கோ தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் அதில் புகழ் என்ற கோமாளி நடிகருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

இவரின் திறமையால் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த நிலையில் உள்ளன.இந்நிலையில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.மேலும் சந்தானம் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து பல யூ டுப் சேனல்கள் அவரை இண்டர்வியூ எடுத்து வருகிறது.

அதில் ஒரு சேனல் இன்டர்வியூவில் அவர் கூறியது,சில நாட்கள் முன் எனக்கு ஷங்கர் சார் ஆபிஸிலிருந்து அழைப்பு வந்தது.அதில் அவர்கள் கூறியது,உங்களுக்கு என் படத்தில் நடிக்க ஒரு ரோல் உள்ளது என்றார்கள்.பின்னர் அதற்காக கிண்டியில் உள்ள ஆபிஸ்க்கு வரும்படி சொன்னார்கள்.நான் மிகுந்த ஆர்வத்துடன் அங்கு சென்றேன்.

ஆனால் அவர்கள் போன் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்கள் என வருத்தத்துடன் கூறினார்.அதையடுத்து அவர் கூறியது தான் அனைவரையும் கலங்கமடைய செய்தது,நான் குக் வித் கோமலிக்கு மட்டும் தான் கோமாளி,நிஜத்தில் அல்ல என்றும் அவர் வருத்ததுடன் கூறியுள்ளார்.

இதனைக் கண்ட பார்வையாளர்கள் பல துயரங்களை கண்டு மேலே வந்து கொண்டிருக்கும் கலைஞர்களை ஏமாற்றுவது மிகவும் கஷ்டமான செயல் ஆகும்.இனி யாரும் இவ்வாறு செய்யாதீர்கள்.அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.