சிறகடிக்க துடிக்கும் கிளி! உதயநிதியை கலாய்த்த திமுக சீனியர்கள்!

0
135

நேற்றைய தினம் திருச்சி சிறுகனூர் அருகே எதிர்கட்சியான திமுக ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது இதில் திமுகவின் தொண்டர்கள் திரளாக பங்கேற்றார்கள். திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதிக்கு இந்த மாநாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருப்பதாக சொல்கிறார்கள்.திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவருடைய மகனான உதயநிதி ஸ்டாலின் தான்தான் துணை முதலமைச்சர் என்பதை இந்த பொதுக் கூட்டத்தின் மூலமாக உறுதி செய்திருப்பதாக சமூக வலைதளம் பயன்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்திலேயே ஸ்டாலினை ஒவ்வொரு விஷயத்திலும் முன்னிலைப்படுத்த தொடங்கினார் அந்த சமயத்திலேயே திமுக ஒரு குடும்ப கட்சி என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஸ்டாலின் பின்பு தன்னை முழு நேர அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சி பணிகளை செய்து கட்சியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார். அதேபோல அவருக்கு கட்சி உறுப்பினர்கள் இடமும் ஆதரவு பெருகியது.அதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் அவருக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. அவருக்கு ஆதரவு பெருகப்பெருக குடும்ப அரசியல் என்ற ஸ்டாலின் மீது இருந்த விமர்சனம் மறையத் தொடங்கியது. அப்போது ஸ்டாலின் தமிழக மக்களிடம் தெரிவிப்பது என்னவென்றால் தனக்குப் பிறகு தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்பதுதான்.

அன்று அவ்வாறு தெரிவித்த ஸ்டாலின் அவர்களே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயிரிழந்த ஒரு சில மாதங்களில் தன்னுடைய ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்களை கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்தார். அதற்கு முன்பாகவே கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் தனக்குப் பிறகு தன் குடும்பத்திலிருந்து வேறு யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று தெரிவித்த அதே ஸ்டாலின் இன்று கருணாநிதியால் ஸ்டாலின் முதன்முதலாக கட்சியில் எந்த பொறுப்பில் அமர வைத்தாரோ அதே பொறுப்பில் இன்று தன்னுடைய மகனை அமர வைத்து இருக்கின்றார். இதில் தான் அடங்கி இருக்கிறது அவருடைய அரசியல் சூட்சமம் என்று தெரிவிக்கிறார்கள்.இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் வந்ததிலிருந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் திமுக சார்பாக வைக்கப்படும். பேனர்களில் உதயநிதியின் புகைப்படம் முக்கியத்துவம் பெற தொடங்கியது. அது தமிழக மக்களிடையே விமர்சனத்தையும் பெற்றது. இதையெல்லாம் அறிந்து கொண்ட ஸ்டாலின் இனி கட்சியின் சார்பாக வைக்கப்படும் எந்த ஒரு பேனர்களிளும் உதயநிதியின் புகைப்படம் இடம்பெறக்கூடாது என்று உத்தரவை பிறப்பித்திருந்தார்

இருந்தாலும் இதனை புறந்தள்ளும் வகையாக திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் அவர்களின் புகைப்படமும் உதயநிதி அவர்களின் புகைப்படமும் பிரம்மாண்டமாக இடம்பெறும் கட்டவுட் வைக்கப்பட்டு இருந்தன.இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியது. இந்த நிலையில், வலைதள பயன்பாட்டாளர்கள் சாதாரணமாக கட்சியின் இளைஞரணி செயலாளராக இருக்கும் சமயத்திலேயே தலைவர் ஸ்டாலின் அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லையே இனி எதிர்வரும் காலத்தில் அவர் எவ்வாறு உதயநிதியை கட்டுப்படுத்துவார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதே சமயத்தில் திமுக என்ற கட்சிக்குள் ஸ்டாலின் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த சமயத்தில் இருந்து கருணாநிதி மரணம் அடையும் வரையிலும் கூட எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கூட தன் தந்தையான கருணாநிதியிடம் தெரிவிக்காமல், அவருடைய அனுமதி பெறாமல் ஸ்டாலின் எதையுமே செய்ததில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்சமயம் ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதி கட்சிக்குள் வந்த மாத்திரத்தில் சிறகடித்து பறக்க ஆசைப்படுகிறார் என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் திமுகவின் சீனியர் தலைவர்கள்.

Previous articleதேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு!
Next articleப்பா என்னா லுக்! பிக் பாஸ் திரை பிரபலம்!