அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்க டிடிவி தினகரன் சதித்திட்டம்!

0
114

தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதிர்வரும் தேர்தலில் தனியாக நிற்க முடிவு செய்து வேட்பாளர்பட்டியல் முதல்கொண்டு வெளியிட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே சென்ற தேமுதிகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் கூட்டணிக்கான அறிவிப்பு வெளியாகும். இந்த தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் உண்மையான அம்மாவின் விசுவாசிகள் எல்லோரும் எங்கள் பின்னால் இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.தமிழ்நாட்டில் விஜயகாந்தின் தேமுதிகவிற்கு வெறும் இரண்டு சதவீத வாக்குகள் தான் இருக்கிறது என்று ஒரு சர்வேயில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

அப்படி இருக்கையில், இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது ஆளும் கட்சியான அதிமுகவின் ஓட்டுக்களை பிரிப்பதற்காக தான் என்பது போன்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதேபோல அதிமுக மறுபடியும் வெற்றி பெற்று விடக்கூடாது என்ற காரணத்திற்காக, பல்வேறு கட்சிகள் தங்களுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றாலும் ஓட்டுக்களைப்பிரிப்பதற்க்காகவெ கங்கணம் கட்டிக் கொண்டு தனியாக போட்டியிடுகிறோம் என்று தெரிவித்து வருகிறார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மீறி அதிமுக எவ்வாறு வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளப் போகிறது என்பதுதான் தற்சமயம் அரசியல் நோக்கர்களின் கேள்வியாக இருந்துவருகிறது.

Previous articleதடுப்பூசி போட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
Next articleகூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது! பிரச்சாரத்தில் முதல் ஆளாக குதித்த முதல்வர்!