வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது இரு கட்சுகளுடன் பிரச்சாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு அந்தந்த கட்சிகளிடமிருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் என லஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகிறது.இதனையெல்லாம் தடுக்கும் விதமாக தான் தேர்தல் ஆணையம் பல தனி படையினரை வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதுவரை 109.45 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரத சாஹு கூறியது,தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் இன்று வரை கணக்கில் வராத ரூ.109.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதுபோல விரைவு அஞ்சல் மூலம் சுமார் 4.69 லட்சம் வாக்காளர் அட்டை அனுப்பி வைகப்பட்டுள்ளது.அதனையடுத்து நட்சத்திர பேச்சாளர்கள் அட்டைகள் தற்போது வரை 455 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை வரையில் மட்டும் ஆவணங்கள் இல்லாமல் மொத்தம் ரூ.63.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் ஆகியுள்ளன.அதனைத்தொடர்ந்து ரூ.1.18 கோடி மதிப்பிலான மதுபானங்களும்,சேலைகள் மற்றும் ஆடைகளும்,வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நெருங்கி வருவதால் பல ஊழல்கள் நடக்கயிருக்கும்.ஆகையால் தேர்தல் ஆணையம் வருமானவரி துறையினர்,நிலைகன்கானிப்பு என பல குழுக்கள் வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 20 நாட்களிலே இவ்வளவு ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது என்றால் ஊழல் அதிக அளவு பெருகியுள்ளது என்று தன அர்த்தம்.மக்கள் இந்திய குடிமகனாக இருந்து ஊழல் பெருச்சாளிகடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாமல் சுயமாக சிந்தித்து வாக்களியுங்கள்.