ஆட்சியை பிடிப்பதற்கு சூப்பர் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெற கட்சினர் புதிய புதிய அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.அதில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.காங்கிரஸ் ஆனது திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட உள்ளது.இதற்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 13 ஆம் தேதி வெளியிட்டனர்.தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையை கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் காங்கிரஸ் கட்சியினர் கூறியிருப்பது,
உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்புகள் கிடைக்க புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருடம் ஒன்றுக்கு சிறப்பாக படித்து தேர்ச்சி பெற்ற 500 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உணவு இருக்க இருப்பிடம் அமைத்து 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு பின் பணியில் அமர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்துரையில் பின் தங்கிய மாநிலங்களிலிருந்து,தொழில் தொடங்கயிருக்கம் நபர்களுக்கு நிலம்,மின்சாரம் போன்ற ஆதாரத் தேவைகளின் விலையின் சலுகையும் மற்றும் கட்டணத்தில் மானியமும் வழங்கப்படும்.
அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பத்தங்களை தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.
பணமதிப்பிழப்பு,குளறுபடியான ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் வகைகளில் பெற்ற கடனுக்காக 50 சதவீதத்தைதமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
கல்வியிலும் வேலையிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகள் போராடிவரும் அந்த வேளான் சட்டங்களை தவிர்த்து,விவசாயிகளை காக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்.அதன்பின் அரசு பள்ளியிலும் மாணவர்களுக்கு அனைத்து கல்லூரிகளிலும் சேருவதற்கு ஒதுக்கிய 7.5 சதவீதமிலிருந்து 10 சதவீதமாக மாற்றப்படும்.
முதியோர் உயர்வூதியம் உயர்த்தப்படும்.அதுமட்டுமின்றி அந்த ஊதியமானது அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்கப்படும்.
இது போன்ற பல அறிக்கைகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.விலைவாசிகள் அதிக அளவு ஏறிய நிலையிலும் விவசாயிகளின் போராட்டத்தினாலும் மக்கள் பா.ஜ.க கட்சியின் மீது மிகுந்த கோவத்தில் உள்ளனர்.இந்நிலையில் இவர்களின் இவ்வகையான அறிக்கை மக்களை வெகுவாக கவர்கிறது.இவர்கள் வெற்றிபெற அதிக வாய்புகள் உளதாக வெளிவட்டாரங்கள் பேசி வருகின்றனர்.