கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி. இடையிடையில் அந்த கட்சிக்கு முக்கியத்துவம் அதிமுகவினரால் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்து அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
அதோடு எங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கவும் தயங்கமாட்டோம் என்பது போன்ற மிரட்டல்களையும் அதிமுகவிற்கு விடுத்து வந்தார் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிலையில், தேர்தல் நெருங்கி வந்ததும் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு போன்றவற்றில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையில் மன வருத்தம் உண்டானது.இதனைத் தொடர்ந்து தேமுதிக தேர்தல் தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டது இதனால் கோபமடைந்த தேமுதிக தலைமை கூட்டணியில் இருந்து வெளியேறியது.
அதன் பிறகு திமுக கூட்டணிக்கு சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்த அந்த கட்சி அந்த கட்சியின் கதவையும் தட்டி பார்த்தது ஆனால் திமுக அதற்கு இசைவு அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே கமல்ஹாசன் பக்கம் சென்று பார்த்தது அங்கேயும் இந்த கட்சிக்கு கிரீன் சிக்னல் கிடைக்காத காரணத்தால், கடைசியாக டிடிவி தினகரன் இடம் ஆதரவு கேட்டது இறுதியாக டிடிவி தினகரன் கூட்டணியில் தேமுதிகவிற்கு சுமார் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்தநிலையில், திருவெற்றியூர் சட்டசபை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சௌந்தரபாண்டியன் அவர்களை ஆதரிக்கும் விதமாக டிடிவி தினகரன் நேற்றைய தினம் பிரச்சாரத்தில் இறங்கினார். அந்த சமயத்தில் தன்னுடைய கூட்டணி கட்சியாக இருந்து வரும் தேமுதிகவின் பெயரை தெரிவிப்பதற்கு மறந்துவிட்டார். டிடிவி தினகரன் இதனை கவனித்து கொண்டிருந்த அந்த கட்சியினர் முறைப்படி எங்களை அழைப்பு விடுக்கவில்லை எனவும் எங்களை அந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மதிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
அதோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பிரமுகரை கூட்டணி சார்பாக தேமுதிக தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் இது தொடர்பாக எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை எனவும் இதன் காரணமாக நாங்கள் அவர்களை புறக்கணிக்கிறோம் எனவும் தேமுதிகவினர் விஜயகாந்தின் பெயரை தெரிவித்து குரல் எழுப்பி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தன்னுடைய பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கே வாடகைக்கு அழைத்துவரப்பட்ட குழுவிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகரை சுற்றிவளைத்த அந்த கோஷ்டியை சார்ந்த தலைவி ஒருவர் ரூபாய் 200 பேசியபடி கொடுக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதோடு இன்று காலை சுமார் பதினோரு மணி அளவில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அவர்களும் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து பேச இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் கிடைத்தது. இந்த பேச்சுவார்த்தையில் அனேகமாக உடன்பாடு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.