களத்தில் இறங்கிய பாஜக அரசியல் சாணக்கியர்! கூண்டோடு காலியாகும் திமுக!

Photo of author

By Sakthi

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார்கள்.
அதிலும் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்து வரும் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக ஆகும் மூச்சு விடுவதற்கு கூட நேரம் இல்லாமல் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக வெகு காலமாக முயற்சி செய்து வருகிறது.

இதற்காக பாஜகவின் அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்சமயம் பணிகளை தொடங்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதன் முதல் வேலையாக எதிர்க்கட்சியான திமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தங்கள் வசப்படுத்தி அதற்கான திட்டத்தை அவர் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியில் அமர்ந்து விட வேண்டுமென்று மிக உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறது.
அதுபோல கடந்த பத்து வருடமாக ஆட்சியிலே இருக்கின்ற அதிமுக நாம் நிறைய திட்டங்களை செய்திருக்கிறோம் அதன் காரணமாக, நிச்சயமாக இந்த முறையும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அதிமுகவும் பணியாற்றி வருகிறது.அதே சமயத்தில் அதிமுகவிற்கு தமிழகத்தில் இருக்கின்ற செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலமாக, தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்று பாஜகவின் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் தமிழகத்திலே அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் அதற்கு சரியான போட்டியை கொடுக்கும் ஒரு கட்சியாக திமுக இருந்து வருகிறது. அதனால் எப்படியேனும் தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என வெகுகாலமாக அதிமுக முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்தனர்.பாஜக அதிமுக கூட்டணியில் இருப்பதால் எப்படியாவது நாம் தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பல வேலைகளை செய்து வருகிறது. அதே சமயத்தில் பாஜக தன்னுடைய பரம விரோதியாக கருதி வரும் திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சில பல ரகசிய வேலைகளை செய்து வருவதாக சொல்கிறார்கள்.

எப்படியாவது திமுகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் அதன் பிறகு பாஜக அதிமுக என்ற இரு கட்சிகளை விட்டால் பெரிய கட்சி வேறு எதுவும் இல்லை என்ற நிலைக்கு வந்து விடலாம் என்பதே அந்த கட்சியின் எண்ணமாக இருந்து வருகிறது.அந்த வகையில், அந்தக் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் போன்றவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது அது ஓரளவிற்கு பலனும் அளித்திருப்பதாக சொல்கிறார்கள்.தற்சமயம் அந்த கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் பலர் பாஜக பக்கம் வருவதற்கு தயாராக இருப்பதாக சொல்கிறார்கள். இப்பொழுது மட்டுமல்ல தேர்தலுக்குப் பின்னரும் கூட அந்த கட்சியில் இருக்கக்கூடிய பலரை தன் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இதுதொடர்பாக திமுக தலைமையிடம் விசாரித்தால் அவ்வாறு கட்சி மாறும் யாரும் எங்கள் தரப்பில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு தற்போது திமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் எல்லோரும் எங்கள் கட்சியில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் ஆகவே அவர்கள் எங்கள் கட்சியை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.என்னதான் திமுக நம்பிக்கையுடன் இருந்தாலும் இந்த முறை எப்படியேனும் தமிழகத்தில் திமுகவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக மிகத் தெளிவாக இருக்கிறது. அதற்காகவே முழுமூச்சுடன் இந்த வேலைகளில் இறங்கியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று சொல்கிறார்கள்