நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு!

Photo of author

By Rupa

நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு!

Rupa

If not for us, there is no AIADMK! BJP candidate Vanathi Srinivasan's speech!

நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடையே கூறி ஓட்டுகளை பெற நினைக்கின்றனர்.அந்தவகையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கி அவர்களின் மூலமும் ஓட்டுகளை பெற திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதிமுக-வானது பாஜக மற்றும் பாமக ஆகியோருடன் கூட்டணியை அமைத்துள்ளதுஅதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டனி வைத்த பாஜக வாக்குகளை சேகரித்து வருகிறது.இந்நிலையில் கோவை மாவட்டம் தெற்கு தொகுதியை சேர்ந்த வானதி சீனிவாசன் அத்தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவர் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது பல திடிக்கிடும் தகவல்களை கூறினார்.அவர் பிரச்சாரத்தில் மக்களிடையே கூறியது,மத்திய மாநில அரசு கொண்டுவரும் திட்டங்களை எதிர்ப்பதே திமுக தலைவரின் அன்றாடா வேலையா வைத்துள்ளார் என எதிர் கட்சியினை சரமாரியா வெளுத்து வாங்கினார்.மேலும் அதிமுகவில் சில சிக்கல்கள் ஏற்பட்டது,அப்போது தான் டெல்லி தலைமையகத்தின் அமைச்சர்கள் பற்றியெல்லாம் புரிந்தது என குதர்க்கமாக கூறினார்.

மேலும் அதிமுக அரசாங்கம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்பதை டெல்லி தலைமையகம் புரிந்துக்கொள்வதற்கு  நாங்கள் அனைவரும் தான் உறுதியாக இருந்தோம் என அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறினார்.நாங்கள்  இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை என்பது போல பேசினார்.மேலும் இவரது பேச்சானது  அதிமுகவிற்கு பாஜக தான் லெப்ட் ஹாண்டு என்பது போல இருந்தது.