பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!

Photo of author

By Rupa

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது அதிக அளவு சூடு பிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர்வதற்கு பல இடங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை லஞ்சமாக கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் ஆனது பல பறக்கும் படையின் குழுக்களை நியமித்து கண்காணித்து வருகிறது.

நேற்று அதிமுக தரப்பில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் கிருஷ்ணன் பெண்களுக்கு புடவைகளை பரிசாக கொடுத்து அதற்கடியில் 1000 ரூபாயை வைத்து கொடுத்துள்ளார்.இது அந்த பகுதியில் பெருமளவு சர்ச்சையை உண்டாக்கியது.அதுமட்டுமின்றி தினந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து பல லட்ச கணக்கான பணங்கள் பரிமுதல் செய்யப்படுகிறது.ஓட்டிற்காக பணத்தை லஞ்சமாக வாங்குவது குற்றம் என்பது சட்டம் கூறினாலும் ஓட்டு போடும் போது மட்டும் தான் இவர்களிடமிருந்து பணத்தை வாகங்க முடியும் என்ற எண்ணத்தில் மக்கள் லஞ்சத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

அதே போல் கமல் முக் கூட்டணி கட்சியாக தேர்தல் களத்தில் ஓட்டுகளை கேட்டு வளம் வருகிறார்.அதனைத்தொடர்ந்து கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.அப்போது அவர் அங்கு மற்ற அரசியல்வாதிகள் தேர்தலின் போது செய்யும் யுக்தியையே இவரும் பாலவ் செய்தார்.மக்களோடு மக்களாக பேருந்தில் செல்வது,மக்களோடு மக்களாக தேநீர் அருந்துவது என்று பழைய டெக்னிக்கை உபயோகபடுத்தினார்.

இதனையடுத்து அவர் இன்று தஞ்சாவூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.அதன்பின் திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ள அவரது கேரவினில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத நிலையில் பறக்கும் படையினர் கமல் சென்றுக்கொண்டிருந்த கேரவனை நிறுத்தி சோதிக்க தொடங்கி விட்டனர்.திடீரென்று பறக்கும் படையினர் வந்ததால் கமல்ஹாசன் பதற்றமடைந்தார்.அவர் வாகனத்தில் ஏதும் கிடைக்காததால் பறக்கும் படையினர் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.