அமமுக தலைவருக்கு திடீர் மாரடைப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தலானது நெருங்கி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.இதனைத்தொடர்ந்து மக்களிடம் பல நூதன முறைகளில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று அதிக அளவு பரவுவதால் மீண்டும் விடுமுறை அளித்துள்ளனர்.
பலர் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க செல்லும் போது கூட்டம் கூட்டமாக செல்கின்றனர் அப்போது சிறிதும் கொரோனா விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் இருப்பதால் தலைவர்களுக்கே கொரோனா தொற்றானது பரவி இருக்கிறது.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் இருவருக்கு கொரொனோ தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பல கட்சி வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதற்கு காரணம் அவர்கள் முறையாக கொரோனா விதிமுறைகளை கடைபிடைக்காததே என பலர் கூறி வருகின்றனர்.அதிலும் முக்கியமாக கொரோன விதிமுறைகளை பின்பற்றாமல் பிரச்சாரத்தை மேற்கொண்டதால் திமுக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர் என 1000 பேர் மீது இது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இவ்வாறு ஒவ்வொரு அரசியல் வாதிகளும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்ற நிலையில்,கடந்த சனிக்கிழமை அன்று அமமுக வேட்பாளர் எஸ்.காமரஜ்க்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.அவரை உடனே தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இருதய சிறப்பு மருத்துவரான கேசவ மூர்த்தி தலமையிலானோர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
அப்போது அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜிற்கு இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதில் இரண்டு இடங்களில் கூடதலான அடைப்புகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆஞ்சியோ சகிச்சை மூலம் அவருக்கு அந்த அடைப்புகள் சரி செய்யப்படும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அவர் பூரணம் குணமடைந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்,அவர் வீடு திரும்பினாலும் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.