சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி!
சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சி திமுகவும் ஆட்சியை பிடிக்கும் போட்டியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.மக்களின் வாக்குகளை பெற வழக்கம் போல தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் பல கவர்ச்சி திட்டங்களை இரு தரப்பும் அறிவித்த வண்ணமேயுள்ளது.
அந்த வகையில் இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாகவே கருதபடுகிறது.அதாவது ஸ்டாலின் அறிவித்த பல திட்டங்களை முதல்வராக எடப்பாடி பழனிசாமி சிலவற்றை தற்போதே நிறைவேற்றியது அதிர்ச்சியளித்துள்ளது.
இதனையடுத்து அவருக்கு அடுத்த அதிர்ச்சியை தரும் வகையில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரை அதிமுக பக்கம் இழுக்கும் பணியையும் எடப்பாடி தரப்பு செய்து வருகிறது.இதில் எடப்பாடி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் எம்எல்.ஏ வும் திமுக ஆதரவாளருமான காவேரி அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
திமுகவின் மாநில விவசாய தொழிலாளரணி இணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் தான் காவேரி.இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பாமகவின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதன் பிறகு அடுத்த தேர்தலில் தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பதால் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார்.பின்னர் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துவும் சேலத்திலுள்ள முதல்வரின் வீட்டில் அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளனர்.