ரூ. பத்தாயிரம் அபராதத்திற்காக உயிரை விடுவதா? குழப்பத்தில் பொதுமக்கள்!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்காக பல பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் லஞ்சங்கள் கொடுத்ததும் பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து வருகிறார்கள். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முப்பு நடந்த எம்.பிகளுக்கு விருது வழங்கும் விழாவில் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கலந்துகொண்டார்.
அதில் அவர் பேசிய போது பான் அட்டையுடன் ஆதார் அட்டையையும் இணைதல் பட்றியும் கூறினார். இந்த செயல் வரவேற்க்கத்தக்கது என்று கூறினார். இதை தொடந்து இன்று பான் அட்டையுடன் ஆதார் அட்டையையும் மார்ச் மாதம் வரும் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். என்று மதிய அரசு உத்தரவு செய்துள்ளது. பான் அட்டையுடன் ஆதார் அட்டையையும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயல்படாது என்றும் உத்தரவு செய்துள்ளது.
மீறினால் ரூ. 10,000 அபராதம் விடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. நாடு முழுவதும் அதி வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்றுநோய்யால் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் பொதுமக்களுக்கு மதிய அரசின் இந்த உத்தரவால் சிறிது குழப்பத்தில் உள்ளனர். ரூ. 10,000 அபராதத்திற்காக உயிரை விடுவதா என்ற கேள்வி மக்களியே பரபப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.