வானதி சீனிவாசன் தன் தொகுதி மக்களுக்கு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் கோவை மக்கள்!

0
178

தமிழக சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரை பாஜக ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்க இருக்கின்றது..இந்த நிலையில், சமீபத்தில் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தது.இந்த நிலையில், கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லத்தரசிகளுக்கு இன்டக்ஷன் ஸ்டவ் இலவசமாக கொடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

கோவை தெற்கு தொகுதியில் பொருத்தவரையில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிடுகிறார். பிஜேபியை பொருத்தவரையில் அந்தக் கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் களம் காண இருக்கிறார். இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, அந்த தொகுதி மக்களுக்கு இன்டக்ஷன் ஸ்டவ் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அவர் தெரிவித்திருக்கிறார் இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அதிரடி அறிவிப்பானது கோவை தெற்கு தொகுதியில் உள்ள மக்களிடையே பரவி வருகிறது. தொகுதியில் இருக்கக்கூடிய வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பெண்கள் என்று பலரும் இதை தான் தற்போது விவாதம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. எல்லோருக்கும் இன்டக்ஷன் ஸ்டவ் கொடுத்துவிட இயலுமா என்பதே அனைவரின் கேள்வியாக இருந்துவருகிறது.அதோடு என்னுடைய தொகுதியில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்ற காரணத்தால், இந்த திட்டத்தை நான் அருகில் இருக்கிறேன் இன்னும் பல திட்டங்களை அறிவிக்க இருக்கிறேன் என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். இது எதிர் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleஅண்ணியாருக்கு என்ன தான் ஆச்சு? பிரேமலதாவால் தலையில் அடித்துக் கொள்ளும் தேமுதிக நிர்வாகிகள்!
Next articleகண்ணீர் விட்ட சசிகலா! பதறிப்போன தொண்டர்கள்!