கோவையில் மகுடம் சூடும் அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் திமுக!

0
94

தமிழகத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்ற நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது.அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுமார் 124 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. அதேபோல திமுக சுமார் 94 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் 15 தொகுதிகளில் திமுகவிற்கு இழுபறி நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் ஒரு பிரச்சார கூட்டத்தின் பொழுது தனக்கு எதிராக கேள்வி எழுப்பிய ஒரு பெண்ணிற்கு பதில் கூற மறுத்ததோடு திமுகவை சேர்ந்த ஒரு சிலர் அந்தப் பெண்ணை துன்புறுத்தி அடித்து அந்த கூட்டத்தில் இருந்து வெளியேற்றி இருந்தது மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி அமைச்சர் வேலுமணி சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் தொகுதியாகும். அந்த தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினார். அதில் ஒரு பெண் ஸ்டாலினை நோக்கி பல கேள்விகளை தொடுத்தார் ஆனால் அதற்கு ஸ்டாலினால் சரிவர பதில் கூற இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அந்தப்பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டி அடித்து அங்கிருந்து துரத்தி விட்டார்கள். இதனால் அந்த தொகுதி மக்களிடையே திமுக ஒரு வெறுப்புணர்வு உள்ள கட்சியாக மாறிவிட்டது.இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக் கணிப்பில் அதிமுகவை சார்ந்த அமைச்சர் எஸ் பி வேலுமணி 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடையும் என்றும் திமுக 47 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதேபோல நாம் தமிழர் கட்சிக்கு ஒரு சதவீத வாக்குகள் தான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் 21 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு கோவை தெற்கு தொகுதியில் பாஜக சுமார் 45 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடையும் எனவும் அதேபோல காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி போன்றவை சுமார் 21 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.