பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்! வேதனையில் கட்சி நிர்வாகிகள்!

Photo of author

By Sakthi

நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக முதலில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது ஆனால் அந்த கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த கூட்டணியில் இருந்து விலகி தற்பொழுது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இருக்கிறது.அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 12 தொகுதிகளை அதிகபட்சமாக கொடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தினகரன் தரப்பு அந்த கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறது.இதில் கடந்த 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் தனித்து நின்று வெற்றி பெற்ற விருதாச்சலம் மற்றும் 2011ஆம் ஆண்டு விஜயகாந்த் நின்று வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் போன்ற தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இதில் கடந்த 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் கலந்து வெற்றி பெற்ற விருதாச்சலம் தொகுதியில் தற்போது விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொருளாளர்மான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட இருக்கிறார்.இந்த நிலையில், தன்னுடைய முழு கவனத்தையும் விருத்தாச்சலம் தொகுதியில் செலுத்தி வருகிறார் பிரேமலதா. பிரேமலதா விஜயகாந்தின் தம்பியான சதீஷ் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவருடைய சகோதரி என்ற முறையில் பிரேமலதாவிற்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்கள் கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்.

ஆனால் இதற்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதோடு அவரை அதிகாரிகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கட்டாயப்படுத்தியதன் விளைவாக பிரேமலதா விஜயகாந்த் பரிசோதனைக்கு ஒத்துழைத்தார். ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது.இந்த தகவலானது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வரையில் செல்ல அவர் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு உரையாற்றி இருக்கிறார். இதனை அடுத்து பரிசோதனையின் முடிவு வரும் வரையில் தனிமையில் இருக்க வேண்டும் என்று பிரேமலதாவிடம் தெரிவித்திருக்கிறார்கள் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள். ஆனால் பிரச்சாரத்திலிருந்து ஒதுக்குவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை கட்டாயப்படுத்தியதன் விளைவாக கடந்த 24ஆம் தேதி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் காலையில் பரிசோதனையின் முடிவு நெகட்டிவ் என்று வந்ததும் மீண்டும் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பிரேமலதாவிற்கு லோக்கல் கட்சியினர் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தால்,அந்த கட்சியின் 76 மாவட்ட செயலாளர்களில் தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளை சார்ந்த மாவட்டச் செயலாளர்களை தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் என்று எல்லோரும் விருதாச்சலம் தொகுதிக்கு வரவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். இதனையடுத்து விருதாச்சலத்திற்கு விரைந்த பொறுப்பாளர்கள் தங்குவதற்கு வசதி இல்லாமல் ஊர் திரும்பி விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அரசியலில் இருக்கும் நெளிவு சுளிவு எதையுமே தெரிந்து கொள்ளாமல் பிரேமலதா இப்படி பிடித்த பிடியாக இருப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று தெரிவிக்கிறார்கள். அதோடு நாம் கூட்டணி மாறியதை விட அதிமுக கூட்டணியிலிருந்து தேர்தலை சந்தித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது போன்ற கருத்து தேமுதிக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.