பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள்
கேம் ஸ்கேனர் (Cam Scanner) செயலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அதனை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான செயலி கேம் ஸ்கேனர் (Cam Scanner). பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வரையும் அனைவரது ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அனைவரும் தங்கள் கோப்புகளை புகைப்படங்களாக எடுத்து பிடிஎப் (PDF) கோப்புகளாக மாற்றம் செய்து பகிர்வதில் தற்போது வரையில் முதல் இடத்தில் இருப்பது கேம் ஸ்கேனர். இப்படிப்பட்ட செயலியில் பாதுகாப்பு குறைகள் இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.
உலகம் முழுவதும் 100 மில்லியன் மேற்பட்டோர் இந்த செயலியை உபயோகித்து வருகின்றனர். நவீன உலகில் ஆன்ட்ராய்டு போன்களின் எழுச்சி மிகப்பெரிய வரப்பிரசாதம், இருந்தாலும் இதன் மூலமாகவும் பல சிக்கல்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் விளைவாக தான் கேம் ஸ்கேனர் (cam scanner) புதுப்பிக்கப்பட்ட செயலியில் தற்போது விளம்பர மால்வேர் வைரஸ் ஒன்று இருப்பதாகவும்இருப்பதாக கேஸ்பெர்ஸ்கீ ஆண்டி வைரஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த மால்வேர், பயனாளர்களுக்கு ஆபாச விளம்பரங்களை காண்பிக்கும் என்றும், பயனாளரின் அனுமதியின்றி சந்தாதாரராக்குகிறது என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கூகுள் நிறுவனம் கேம் ஸ்கேனர் (Cam scanner) செயலியை நீக்கியுள்ளது. இந்த வைரஸ் பிரச்சனை ஆண்ட்ராய்டு வகை மொபைல் போன்களில் மட்டுமே உள்ளதாகவும் மற்ற ஓ.எஸ்-களில் பிரச்சினை இல்லை என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
இதுபோல இன்னும் பல செயலிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அந்த செயலியை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.