தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சரியாக ஒன்பது தினங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த விதத்தில், அந்தந்த தொகுதிகளுக்கு உண்டான வேட்பாளர்கள் தொகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் கட்சி வேட்பாளர்களும் சரி, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சரி, தங்களுடைய தொகுதி மக்களிடம் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று வாக்கு கேட்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள் அந்த வகையில், தமிழகம் முழுவதும் இந்தப் பணியானது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த விதத்தில், மதுரை மேற்கு தொகுதியில் ஆளும் கட்சியான அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு பெத்தானியாபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார். அந்த சமயத்தில் ஒரு தொண்டனின் பெண்குழந்தைக்கு அவர் பெயர் சூட்டினார். அதன்பிறகு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்க தொடங்கினார். அதனையடுத்து பிரச்சாரத்தின் போது உரையாற்றிய அமைச்சர் அதனுடைய துறையில் நான் எப்பொழுதும் ஊழல் முறைகேடு போன்றவற்றை செய்ததில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் என்னுடைய துறையின்கீழ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்கட்சி குற்றம் சாட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நான் விலகிக் கொள்ளத் தயார் என்று தெரிவித்திருக்கிறார். என்னுடைய ஊர் மக்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே அறிமுகமான என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் மதுரை மாவட்ட மக்கள் தான். என்னுடைய தொகுதி மக்களுக்காக நான் நிறைய செய்திருக்கிறேன் பொதுமக்களின் வரவேற்பால் அதற்கான பலனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் எதிர்க்கட்சியினர் என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு.