செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி போட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்!

0
101

ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட குழப்பத்தில் டிடிவி தினகரன் பக்கம் சென்றார். அதன் பிறகு அவர் கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலமாக தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த நிலையில், அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பிறந்த சமயத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருகிறேன் என்று தெரிவித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அவருடைய இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வாங்கிக்கொண்டார்.இந்த வழக்கானது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்பிறகு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து மோசடி வழக்கில் இருந்து தண்ணி விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் செந்தில்பாலாஜி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இன்றைய நிலையில் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சார்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரின் பெயரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை. முதல் குற்றப்பத்திரிகையில் அவருடைய பெயர் இடம் பெறாத ஒரு சூழ்நிலையில், இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் அவருடைய பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் சுமார் 62 லட்சம் மோசடி செய்திருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.